சென்னை, செப்.19: சென்னை மயிலாப்பூர், பாபனாசம் சிலையில் ரூ.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 288 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும், 31 கோடியே 55 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 162 காவலர் குடியிருப்புகள், 3 காவல் நிலையங்கள், 2 காவல்துறை இதர கட்டடங்கள், 2 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 13 குடியிருப்புகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை காவல்துறை ஆற்றி வருகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையின் பணிகள் மேலும் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளைக் கட்டுதல், காவல்துறை அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும், சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் 1 கோடியே 94 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 காவலர் குடியிருப்புகள், இராயபுரத்தில் 3 கோடியே 88 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 28 காவலர் குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம் – மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 9-ஆம் அணிக்காக 11 கோடியே 7 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 118 காவலர் குடியிருப்புகளையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை தலைமை இயக்குநர். திரிபாதி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் முனைவர் செ.கி. காந்திராஜன்.