‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்கு பிறகு விஜய் – அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘பிகில்’. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, சவுந்தரராஜா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இதில் இடம்பெற்றுள்ள சிங்கப்பெண்ணே…. என்ற பாடல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆன நிலையில் மற்ற பாடல்களின் வெளியீட்டு விழா இன்று தாம்பரம் சாய்ராம் கல்லூரி அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பு மேடை அமைக்கப்பட்டுள்ளது. படக்குழுவினருடன் விஐபிகள் சிலரும் பங்கேற்கின்றனர். பாடல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு விஜய்-நயன்தாரா இடம் பெற்றுள்ள ரொமட்டிக் ஸ்டில்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.