ஜெய்ப்பூர், செப்.19: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அக்கும்பலை பிடிக்க தீவிரமாக கண்காணித்தனர். இது தொடர்பாக கெம்சந்த், ராஜேஷ்பன்கர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.4.77 கோடி கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்தனர். மேலும் பொம்மை துப்பாக்கி, ஏ.டி.எம். கார்டுகள் போலி முத்திரைகள், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் இருவரும் ஏற்கனவே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடித்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த கள்ள நோட்டுகள் எங்கு அச்சடிக்கப்பட்டவை என்பது குறித்தும், பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டதா என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.