புதுச்சேரி, செப்.20: காஞ்சி மடத்துக்கு சொந்தமான யானைகளை திருச்சி அருகே உள்ள முகாமுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அந்த யானைகளை முறையாக நாங்கள் யானைகளை பராமரித்து வருகின்றோம் என்றும் பாண்டிச்சேரி அருகே அவற்றை பராமரித்து வரும் பாகன்கள் கூறியுள்ளனர்.

புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்தின் எல்லையில் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கந்தாடு ஊராட்சியில் குறும்படம் மூலிகை வனத்தின் அருகில் காஞ்சி காமகோடி பீடத்திற்கு சொந்தமான 3 பெண் யானைகள் தனியார் இடத்தில் முகாம் அமைத்து அங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த முகாமில் உள்ள மூன்று பெண் யானைகளும் சந்தியா, ஜெயந்தி, இந்துமதி என பெயரிடப்பட்டு இந்த யானைகள் முகாமில் இருக்கின்றது.