வாஷிங்டன், செப்.20: அமெரிக்காவின் வாஷிங்டனில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் பாதுகாப்பிற்காக தனி நபர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் திடீரென உணர்ச்சி வசப்படுவோரும், லேசாக மனநிலை பாதிக்கப்பட்டோரும் துப்பாக்கியை தவறாக பயன்படுத்தி மனித உயிரை காவு கொள்வது அங்கு வாடிக்கையாக உள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 5 பேர் காயம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.