விழுப்புரம்,செப்.20: விழுப்புரம் மாவட்டம் மயிலம் முருகன் கோவிலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப் பட்ட அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர். இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படங்கள் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம், குறிப்பாக இப்புகைப்படக் கண் காட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு சிறப்புத் திட்டங்கள் வாயிலாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, வளர்ச்சிப் பணி களை தொடங்கி வைத்தது ஆகிய சிறப்பு புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதில் ஊராட்சியைச் சேர்ந்த கிராம பொது மக்கள் 2,000-க்கும் மேற்பட்டோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.