சென்னை, செப்.21: இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டிருப்பதை தொடர்ந்து அக்டோபர் 6-ந் தேதி நடைபெறுவதாக இருந்த திமுக பொதுகுழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் சட்டத் திருத்தங்கள், முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிப்பதற்காக திமுக பொதுக்குழு அக்.6-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அக்டோபர் 6-ல் அறிவிக்கப்பட்டிருந்த பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். பொதுக்குழு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.