சென்னை, செப். 21: கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 27 கைத்தறி நெசவாளர்களுக்கு, விருது மற்றும் பரிசுத் தொகைகளை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

2019-20-ம் ஆண்டிற்கு மாநில அளவில் அதிக உற்பத்தியும், விற்பனையும் பெற்றுத்தந்த பட்டு இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளருக்கான முதல் பரிசாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை சேலம் சரகம், ஜே.ஒ. கொண்டலாம்பட்டி பருத்தி மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் கே.சுப்ரமணிக்கு, பருத்தி இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளருக்கான முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பரமக்குடி சரகம், கலைமகள் பருத்தி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் திரு. கே.கே.பாண்டுரங்கனுக்கும், 2ம் பரிசாக தலா 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை ஆர்.பாபு (பட்டு இரகம்) மற்றும் எஸ்.மல்லிகா (பருத்தி ரகம்) ஆகியோருக்கும், 3ம் பரிசாக தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகளை ஸ்.கே. சரவணன் (பட்டு இரகம்) மற்றும் ஆர்.ராதாமணி (பருத்தி இரகம்) ஆகியோருக்கும்; சிறந்த வடிவமைப்பாளருக்கான முதல் பரிசாக ரூ. 25 ஆயிரம் காசோலையை கும்பகோணம் சரகம், திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க வடிவமைப்பாளர் எம்.கார்த்திகேயனுக்கும் சிறந்த வடிவமைப்பு மற்றும் தரத்துடன் கூடிய கைத்தறி இரகங்களை நெசவு செய்தமைக்காக, 20 திறன்மிகு நெசவாளர்களுக்கு முதல் பரிசாக தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் என மொத்தம், 27 கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகளுக்குரிய பரிசுத் தொகையானரூ. 6 லட்சத்து 75 ஆயிரத்திற்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கௌரவித்தார்.