சென்னை, செப்.21:  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. நீதிமன்றம் மற்றும் பிசிசிஐ வகுத்த விதிமுறைகளின் கீழ் இத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சங்கத்தின் புதிய தலைவராக பிசிசிஐ-யின் தலைவராக இருந்த இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசனின் மகள் ரூபாவின், பெயரை சங்க உறுப்பினர்கள் ஒரு மனதாக பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரூபா தேர்வு செய்யப்படும் பட்சத்தில், அவர்தான் பிசிசிஐயின் கீழ் உள்ள மாநில கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக இருப்பார்.
ரூபா, ஐபிஎல் சூதாட்ட புகாரில் கைதாகி பின்னர் வெளியே வந்த குருநாத் மெய்யப்பனின் மனைவி என்பது கூடுதல் தகவல்.