புதுடெல்லி, செப்.21: ஹீரோ குழுமத்தின் ஒரு அங்கமான ஹீரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளான கியூபோ ஸ்மார்ட் கேமரா, கியூபோ ஸ்மார்ட் கேஸ் சென்சார், ஸ்மார்ட் ஸ்மோக் சென்சார் மற்றும் ஸ்மார்ட் டோர் அண்ட் வின்டோ சென்சார் ஆகிய தொழில் நுட்ப தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் செப்டம்பர் 27-ம் தேதி முதல் விற்பனையை துவக்குகிறது. ஹீரோ எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தொழில்நுட்பத்துறையில் பல்வேறு தயாரிப்புகளை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. தற்போது புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் முறையாக கியூபோ ஸ்மார்ட் கேமரா, கியூபோ ஸ்மார்ட் கேஸ் சென்சார், ஸ்மார்ட் ஸ்மோக் சென்சார் மற்றும் ஸ்மார்ட் டோர் அண்ட் வின்டோ சென்சார் ஆகிய தொழில் நுட்ப தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

மேற்சொன்ன ஸ்மார்ட் தயாரிப்புகளை www.quboworld.comwww.quboworld.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலமாகவும், செப்டம்பர் 27-ம் தேதி முதல் வாங்கிக்கொள்ளலாம். இது குறித்து ஹீரோ எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நிறுவன இயக்குனர் உஜ்வால் முஞ்ஜால் கூறுகையில், எங்களது இந்த புதிய கியூபோ ஸ்மார்ட் தயாரிப்புகள் அதி நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டதாகும். சிறந்த பொறியியல் தொழில் நுட்பத்துடனும், வாடிக்கையளர்களின் தேவைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 அல்லது 5 ஆண்டுகளில் ஒரு மில்லியன் வீடுகளில் இந்த ஸ்மார்ட் தயாரிப்புகள் வீட்டை அலங்கரிக்கும் என்று கூறினார்.

ஹீரோ எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிக்கில் ராஜ் பால் கூறுகையில், தகவல் தொழில் நுட்பத்துறையில் எங்களது நிறுவனம் மிகப்பெரிய புரட்சியை செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களை நிச்சயமாக கவரும். 2 ஆண்டுகளாக திட்டங்கள் வகுக்கப்பட்டு நவீன தொழில் நுட்பத்தில் இந்த ஸ்மார்ட் தயாரிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.