தாம்பரம், செப்.21: சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் எண். 127, மூகாம்பிகை நகர் ஏழுமலை இரண்டாவது தெரு, புதுச்சேரி சேர்ந்த சேகர் (வயது 33) சஞ்சய் டிராவல்ஸ் நடத்தி வந்தபோது மேடவாக்த்தைச்சேர்ந்த கிருபாகரன், என்பவரின் இன்னோவா காரை, 2017ம் ஆண்டு, மாத வாடகைக்கு எடுத்து நெல்லையைச் சேர்ந்த, பிரகாஷ் மற்றும் கருப்புசாமி ஆகியோருக்கு 5லட்சத்துக்கு சேகர் விற்றுள்ளார்.அந்த காரை அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த காரை கார்த்திக் என்பவருக்கு விற்றுள்ளனர்.

இது குறித்து, காரின் உரிமையாளர் கிருபாகரன் அளித்த புகாரின் அடிப்படையில், சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பான வழக்கில் சேகரை போலீசார் கைது செய்த விசாரணையின் போது நெல்லையை சேர்ந்த கார்த்திக், மற்றும் கருப்புசாமி ஆகியோருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது, விசாரணைக்கு பின் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர், மேலும் வழக்கில் தொடர்புடைய பிரகாஷ், கருப்புசாமி, கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்,