ஹாஸ்டன், செப். 23: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடி ஹாஸ்டன் நகரில் நடைபெற்ற மோடி நலமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எழுச்சிமிகு உரையாற்றினார். அவரது உரையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆயிரக்கணக்கான மக்கள் கரவொலி எழுப்பியும், எழுந்து நின்று உற்சாக குரல் கொடுத்தும் வரவேற்றனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஊக்குவிப்பதை டிரம்ப் முன்னிலையிலேயே அவர் கடுமையாக சாடினார். மோடியின் பேச்சை அதிபர் டிரம்ப் முன்வரிசையில் உட்கார்ந்து வெகுவாக ரசித்து கேட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு அமெரிக்காவின் 17 எண்ணெய் நிறுவனங்களுடன் சுமார் 1.76 லட்சம் கோடி மதிப்பிலான இயற்கை எரிவாயு இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரதமர் மோடி, அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் கலந்து கொண்ட ஹவுடி-மோடி நிகழ்ச்சி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நடைபெற்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ‘உலக அரசியலை, நிர்ணயிக்கும், நபராக, டிரம்ப் விளங்குகிறார். ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்கும் போது உற்சாகம் ஏற்படுகிறது. அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் வலிமை மிக்கதாக மாற்றியவர் டிரம்ப். இரு நாடுகளின் வளர்ச்சி உச்சத்தை தொட்டு இருக்கிறது. வெள்ளை மாளிகை உடனான இந்தியாவின் உண்மையான நட்புறவு புது உச்சத்தில் இருக்கிறது’ என்று கூறினார்.

மேலும் காஷ்மீரில் எடுத்த நடவடிக்கையை விளக்கினார். அமெரிக்கா இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தனர். அவர்களை ஊக்குவித்த நாடு எது என கேட்டு பாகிஸ்தானை கடுமையாக சாடினார். அப்போது அரங்கத்தில் பலத்த கரவொலி எழுந்தது.

ஆதரிப்போர் எழுந்து நின்று கரவொலி எழுப்புங்கள் என மோடி கேட்டு கொண்டதும் ஆயிரக்கணக்கானோர் எழுந்து நின்று அரங்கம் அதிரும் வகையில் கரவொலி எழுப்பினர்.

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பேசுகையில், ‘அமெரிக்காவின் உண்மையான நண்பன் இந்தியா. மோடியுடன் இருப்பது பெருமையாக உணர்கிறேன். என் அருமை இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி. மோடி மிகச்சிறந்த செயல்களை செய்து வருகிறார். இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும். பிரதமர் மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்திய மக்கள் கடுமையான உழைப்பாளிகள். இந்திய சமுதாய மக்களுக்காக எங்களது அரசு உழைக்கிறது. ஜனநாயகத்தின் மீது இரு நாடுகளும் நம்பிக்கை வைத்துள்ளன. டிரம்பை தவிர வேறு சிறந்த நபரை இந்தியா பெற்றிருக்காது’ என்று கூறினார். மோடியின் பேச்சை அதிபர் டிரம்ப் முன்வரிசையில் ஆர்வமுடன் கேட்டார். பேசி முடித்ததும் டிரம்பிடம் வந்து ஒருமுறை இந்த அரங்கை சுற்றி வருவோமோ என கேட்டார். அதற்கு தாராளமாக என பதிலளித்து மோடியை பின் தொடர்ந்தார். டிரம்பின் கையை பிடித்து கொண்டு மோடி அரங்கை வலம் வந்த போது மிகுந்த ஆரவாரம் எழுந்தது. ஹூஸ்டன் நகரில் இதுவரை காணாத உற்சாகம் ஏற்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு அமெரிக்கா வின் 17 எண்ணெய் நிறுவனங்களுடன் சுமார் 1.76 லட்சம் கோடி மதிப்பிலான இயற்கை எரிவாயு இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. இன்றும் அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபர்களுடன் கலந்துரையாடுகிறார்.