சென்னை, செப்.23: அமேஸான் பேக்கேஜ்களை டெலிவரி செய்து ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 120 முதல் 140 வரை வருவாய் ஈட்டவும் ஏதுவாக்குகிற அமேஸான் ஃபிளெக்ஸ் என்ற திட்டத்தை சென்னையில் அமேஸான் இந்தியா அறிமுகம் செய்கிறது. ஒரு செயலியின் வழியாக இயங்கும் இச்செயல்திட்டம், பணியில்லாத ஓய்வு நேரங்களில் அமேஸான் பேக்கேஜ்களை டெலிவரி செய்வதன் மூலம் அவர்களது வருவாய் ஈட்டும் திறனை மேலும் உயர்த்துவதற்கு நூற்றுக்கணக்கான பகுதி நேர வாய்ப்புகளை உருவாக்கும்.

அமேஸான் நிறுவனம் கட்டமைத்து வந்திருக்கின்ற நவீன லாஜிஸ்டிக்ஸ் அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒத்திசைவோடு அமேஸான் ஃபிளெக்ஸ் செயல்படுகிறது. இருசக்கர வாகனங்களை வைத்திருக்கும் ஆர்வமுள்ள டெலிவரி பார்ட்னர்கள் இதில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம், தாங்கள் விரும்புகிற காலஅளவை தேர்வு செய்யலாம் மற்றும் பேக்கேஜ்களை டெலிவரி செய்யலாம். சென்னை மாநகரில் பேக்கேஜ்களை டெலிவரி செய்வதற்கு அமேஸானின் உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 1 மணி நேரத்திற்கு ரூ.120 முதல் ரூ.140 வரை வருவாய் ஈட்டும் விதத்தில் தாங்களே தங்களது முதலாளியாக இருந்துகொண்டு, தங்களுக்கு விருப்பமான பணி நேரத்தை உருவாக்கிக்கொண்டு தங்களது வருவாய் ஈட்டும் திறனை மேம்படுத்துவதற்கு நூற்றுக்கணக்கான நபர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,” என்று அமேஸான் இந்தியாவின் கடைசி மைல் போக்குவரத்து துறையின் இயக்குனர் பிரகாஷ் ரோச்லானி விளக்கமளிக்கிறார்.

“நாடெங்கிலும் தற்போது இருக்கிற எங்களது டெலிவரி திறன்களை தொடர்ந்து நாங்கள் உயர்த்தி வருகின்ற நிலையில், இன்னும் அதிக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கவும், டெலிவரிகளை விரைவாக்கவும் அமேஸான் ஃபிளெக்ஸ் செயல்திட்டம், அமேஸானை ஏதுவாக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.