மும்பை, செப்.23:  உலகக்கோப்பை பிறகு ஓய்வில் இருந்துவரும் இந்திய விக்கெட் கீப்பர் தோனி, தனது விடுப்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்னே தோனியின் ஓய்வு பற்றி விவாதங்கள் இணையங்களில் வைரலதானதுடன், அவரை ஓய்வுபெற வலியுறுத்தி இன்றளவும் நெருக்கடி நிலவிவருகிறது. உலகக்கோப்பைக்கு பின்னரான கிரிக்கெட் தொடர்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால், தோனிக்கு வாய்ப்பளிக்க இயலவில்லை என பிசிசிஐ அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது, ராணுவத்தில் இணைந்து பணியாற்ற போவதாக கூறி தோனி இரண்டு மாதங்கள் விடுப்பு அறிவித்தார்.பின்னர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டி-20 போட்டிகளில் தோனிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான தொடர் வரவுள்ளது. இந்த நிலையில், தோனி தன்னுடைய விடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வங்கதேச அணியுடனான கிரிக்கெட் தொடரில் தோனி விளையாட மாட்டார் என தெரிகிறது. எனவே, டிசம்பர் மாதம் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணி உடனான தொடரில் இந்திய அணியில் தோனியை எதிர்பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.