சென்னை, செப் 23: கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களுக்கு செல்லும் மாநில அரசின் விரைவு பேருந்துகள் வடபழனி, கிண்டி, பல்லாவரம், தாம்பரம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதற்கு முன் இந்த பேருந்துகள் பைபாஸ் வழியாக சென்றது குறிப்பிடத்தக்கது. தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களுக்கு செல்வோர்பெருங்களத்தூர் வரை சென்று அங்கிருந்து விரைவு பேருந்துகளை பிடிக்க வேண்டி இருக்கிறது. அடையாறு, தரமணி, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், துரைப்பாக்கம் போன்ற இடங்களில் இருந்து அரசு விரைவு பேருந்தில் பயணிப்போர் சுமார் 90 நிமிடம் பயணம் செய்து பெருங்களத்தூர் வர வேண்டி இருக்கிறது.

இந்த சிரமத்தை போக்கும் வகையில் கிண்டி, தாம்பரம், வடபழனி வழியாக பஸ்களை இயக்க முடிவெடுத்திருப்பதாக எஸ்இடிசி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதே போல் திருச்சி, மதுரை, தூத்துக்குடி நெல்லை, போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வருவோரும் பெருங்களத்தூரில் இறங்கி எம்டிசி பேருந்துகள் அல்லது வாடகை டாக்சிகளைபிடித்து சொந்த இடங்களுக்கு செல்ல நேர்ந்தது குறிப்பிடத்தக்கது,