புதுவையில் காங்கிரஸ், பிஜேபி சார்பில் விருப்பமனு

தமிழ்நாடு

புதுச்சேரி, செப்.23: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ், பிஜேபி சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஜெயக்குமார் சார்பில் மனு தாக்கல் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபையில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து இடைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் தேர்தல் நடத்தும் அதிகாரி என முகமது மன்சூர் இடம் காசி நகரில் உள்ள சுற்றுலா துறை அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்திருந்தனர் காலை பதினோரு மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் இந்த மாதம் 30-ம் தேதி வரை கடைசி தேதியாகும் அக்டோபர் 1ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை மூன்றாம் தேதி வேட்புமனுக்கள் திரும்பப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது

அக்டோபர் 26-ம் தேதி தேர்தல் நடக்கிறது தற்போது தேர்தல் கமிஷன் அறிவித்தது இலிருந்து புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த உள்ளது இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில துணைத் தலைவர் வினாயகமூர்த்தி தேவதாஸ் ஆகியோரிடம் காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் என்பவர் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார். இதேபோல் பிஜேபி தலைமை அலுவலகத்தில் பிஜேபி கட்சி தொண்டர்கள் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு மாநில தலைவர் சாமிநாதன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர் இதனால் புதுச்சேரியில் காமராஜ நகர் இடைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பரபரப்பு துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது