27-ம் தேதி ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ ரிலீஸ்

சினிமா

அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் ‘2 மூவி பஃப்’ நிறுவனம் சார்பில் ரகுநாதன் பிஎஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. இப்படத்தில், கயல் சந்திரமௌலி, சாட்னா டைட்டஸ், ஆர்.பார்த்திபன், சாம்ஸ், டேணியல் ஆணி போப், அர்ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய கயல் சந்திரமௌலி, ‘கயல் படத்திற்கு பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் எதுவென்று கேட்டால் அது ‘ திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ தான். கயல் படம் எனக்கு எப்படி ஒரு அறிமுக படமாக கிடைத்ததோ, அதேபோல் என் அண்ணனுக்கு தயாரிப்பில் இது முதல் படம்.

திட்டம் போட்டு ஒரு கும்பல் உலக கோப்பையை திருட நினைக்கிறது. அந்த திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை.. சினிமா ரசிகர்கள் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்து இப்படத்தை வரும் 27-ம் தேதி வெளியிடுகிறோம் என்று கூறினார்.
படத்திற்கு மார்டின் ஜோ ஒளிப்பதிவு செய்,அஷ்வத் இசையமைத்துள்ளார். வெங்கட்ரமணன் எடிட்டிங் செய்ய, ரெமியன் கலையமைத்துள்ளார். எஸ்டிசி பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது.