சயிரா நரசிம்மரெட்டி படத்திற்கு யு/ஏ சான்று

சினிமா

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அவரது மகன் ராம்சரண் தேஜாவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சயிரா நரசிம்மரெட்டி’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிந்து வரும் அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று இந்த படம் சென்சாருக்கு சென்றது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு கட் கூட செய்யாமல் முழு படத்தையும் அப்படியே வழங்கி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் மிகுந்த சந்தோசம் அடைந்தனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 49 நிமிடங்கள் என தகவல் வெளிவந்துள்ளது.
இதில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, ஜெகபதிபாபு, கிச்சா சுதீப், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்,

இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். அமித் த்ரிவேதி இசையில், ரத்னவேலு ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.