செங்குன்றம், செப்.24: செங்குன்றத்தில் எய்ட்ஸ் மற்றும் காச நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானனோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் வழிகாட்டுதலின் படி நாரவாரி குப்பம் ஆரம்ப சுகாதார நிலையமும், போதை தடுப்பு மறுவாழ்வு மையமும் இணைந்து எய்ட்ஸ் மற்றும் காசநோய் பரிசோதனை முகாமை நடத்தியது. இந்திய மருத்துவ கழக பெரம்பூர் கிளை செயலாளர் ஆச்சா ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

ஆரம்ப சுகாதார முதன்மை மருத்துவர் ஜோஸ்பின் முன்னிலை வகித்தார். முகாமில் 45 பேருக்கு ரத்தம், சளி, பரிசோதனை செய்யப்பட்டது, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஏ.ஜி. ராஜன் தலைமையில் போதை மறுவாழ்வு மைய மேலாளர் நெல்சன், சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார் செவிலியர் ரேவதி, தனலட்சுமி உள்பட சிறப்பு குழுவினர் கலந்து கொண்டனர். பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட ரத்தம், சளி பரிசோதித்த பிறகு நோய் கண்டுபிடிக்கப்பட்டால் உடன் தொடர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும் என வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜன் தெரிவித்தார்.