சென்னை, செப்.24: கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஜெகன் (வயது 24). கூலி தொழிலாளி இவரை, நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது, வழிமறித்த மர்மநபர்கள் இருவர் ஜெகனை கத்தியால் குத்தி கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அஜித் (வயது 24) என்பவரை கைது செய்தனர்.

கடந்த சில மாதங்களுக்குமுன்பு, அஜித்தின் உறவுப்பெண்ணை ஜெகனும் அவரது நண்பரும் சேர்ந்து கத்தியால் தாக்கி காயப்படுத்தியதாகவும், இதற்கு பழிவாங்குவதற்காகவே கூட்டாளியுடன் சேர்ந்து ஜெகனை கொலை செய்ததாகவும் அஜித் வாக்குமூலத்தில் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.