பிகில் ஆடியோ விழாவை நடந்த அனுமதித்த கல்லூரிக்கு நோட்டீஸ்

TOP-5 சினிமா சென்னை

சென்னை, செப்.24: நடிகர் விஜய் நடித்துள்ள “பிகில்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடந்த அனுமதி கொடுத்த தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு உயர்கல்வித்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில், இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏ ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19-ம் தேதி தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், தமிழக அரசு பற்றியும், அமைச்சர்கள் பற்றியும் மறைமுகமாக சாடினார். இந்த பேச்சு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ‘பிகில்’ ஆடியோ வெளியீட்டு விழாவை கல்லூரி வளாகத்தில் நடத்த அனுமதி கொடுத்தது குறித்து விளக்கம் கேட்டு கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.