சென்னை, செப்.24: உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் நடைபெறும் 64-வது காமன்வெல்த் பாராளுமன்றம் மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் சபாநாயகர் ப.தனபால் கலந்து கொள்கிறார்.

இம்மாதம் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாளை அதிகாலை கத்தான் ஏர்வேஸ் மூலம் தனபால் தோஹா செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் கம்பாலா நகருக்கு செல்கிறார்.

மாநாட்டில் கலந்து கொண்டு 11-ம் தேதி அதிகாலை 2,10 மணிக்கு சென்னை திரும்புகிறார்.