தாம்பரம்,செப். 25: தாம்பரம் பகுதிகளில்உ ள்ள சாலை கள் மிகவும் மோசமாக இருப்பதை கண்டித்து சாலையை சீரமைத்து தர கோரி விடுதலை சிறுத்தை கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாம்பரம் அடுத்த எருமையூர் மற்றும் பழந்தண்டலம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இங்கு எருமையூர் கூட்ரோடு சந்திப்பில் இருந்து பழந்தண்டலம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.

இது குறித்து ஊராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் வினாயகம் தலைமையில் சாலையில் நாற்று நட்டு மிக பெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது. இதில் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, மாவட்ட செயலாளர் செங்கை தமிழரசன்,தொகுதி செயலாளர் மேனகா தேவி கோமகன், மற்றும் வழக்கறிஞர் துரை கார்மேகம், சத்தியராஜ்,ரஞ்சித், ராஜ்குமார், கோதண்டம் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் தொகுதி துணை செயலாளர் பத்ரி கென்னடி, ஏ.ஆர்.கோதண்டம் ஆகியோர் மற்றும் கட்சி தொண்டர்கள் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.