புதுச்சேரி, செப். 25: புதுச்சேரியில் மக்கள் முன்னேற்ற காங்கிரசு கட்சியை ஆரம்பித்த முன்னாள் அமைச்சர் கண்ணன் நடைபெற உள்ள காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்தார் புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் கண்ணன் காங்கிரஸிலிருந்து விலகி இரண்டு முறை புதிய கட்சிகள் துவங்கினார் அதன்பிறகு அதிமுகவுக்கு சென்றார். சிறிது காலம் ஓய்வெடுத்த பிறகு இன்று காலை 12 மணியளவில் புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சியை துவக்கி இருப்பதாக கட்சியின் பெயர் பலகையைத் திறந்து வைத்து பேசினார்

அப்போது அவர் கூறியதாவது: வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் உங்களுடன்தான் இருப்பேன் என்னோடு எதையும் எதிர்பார்க்காமல் எந்த பலனும் இன்றி என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் அதற்கு என் இதய மலர்களை செலுத்துகிறேன்.
தற்போது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை எந்த பலனும் இல்லை உங்களுக்கு செய்வதற்கு உங்கள் அன்பு மட்டும்தான் எனக்கு இருக்கிறது மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சியை துவக்கி உள்ளேன். அதிகாரப்பூர்வமாக இந்த கட்சி செயல்படும் நடைபெற உள்ள காமராஜர் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் பலமுறை கட்சி துவங்கினால் தற்போது பதவிக்கு ஆசை ஏற்பட்டு மீண்டும் துவங்கியதாக சிலர் நினைக்கிறார்கள் உச்சாணிக்கொம்பில் இருந்தபோதே நான் பதவியை துறந்தவன் .

1965இல் காமராஜரை சந்தித்த போது காங்கிரஸில் இணைத்து கொண்டேன் காமராஜரை உதாரணமாக வைத்து அரசியல் செய்து வருகின்றேன் புதுச்சேரியின் உடைய அரசை தூக்கி எறிய வேண்டும் அரிசி போடவில்லை வேலை வாய்ப்பு இல்லை வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்றார்கள் தெருவுக்கு 5 பேர் கூட வேலை கொடுக்கவில்லை ஆட்சியில் இருந்தபோது 25 ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்துள்ளேன் மூடி கிடைக்கின்ற தொழிற்சாலைகளை திறந்து வைப்பேன் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.