குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் பணிகள்

சென்னை

தாம்பரம்,செப். 25 தாம்பரம் கன்னடபாளையம் நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் நடைபெறும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகள் மற்றும் பயோ மைனிங் முறையில் குப்பைகள் அப்புறப்படுத்தும் பணிகளை ஆய்வு பணிகள்நடைபெற்றது,
இந்த பணியின்போது மாநில திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு அலுவலர் நீதிபதி பி.ஜோதி மணி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைக்கு பிறகு சுற்று சூழலில் நல்ல முன்னேற்றம் உள்ளது. ஊட்டியில் பிளாஸ்டிக் தடையை அம்மாவட்ட கலெக்டர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் ஈரோட்டில் குப்பைகளை தரம் பிரித்து அதன் மூலம் செங்கல்கள் தயாரிக்கிறார்கள்.

இது மற்ற செங்கல்களை போல தரமாக உள்ளது குப்பைகளை உரமாக்க முடியும் குப்பை களில் இருந்து பல பொருட் களை தயாரிக்க முடியும் என்ற நிலை தற்போது வந்துள்ளது குப்பைகளை வீடுகளில் தரம் பிரித்துகொடுப்பது தற்போது தமிழகத்தில் பல இடங்களில் அதிகரித்து வருகிறது. இவற்றை நகராட்சிகள் தொடர வேண்டும் என்பது என் வேண்டுகோ என்றார். குப்பைகளை நம் மக்கள் வீட்டில் வைத்து கொள்வதில்லை. அதனால் குப்பைகளை வாங்காமல் இருப்பதை காட்டிலும் அவர்களுக்கு ஒரு பய உணர்ச்சி இருந்தாலே போதும். குப்பைகளை முறையாக கையாளும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் . நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் முஜிபுர்ரகுமான், மண்டல பொறியாளர் முருகேசன்,ஆணையாளர் கருப்பய்யா ராஜா, சுகாதார அலுவலர் மொய்தீன், சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட் அருள்ராஜ், சிவகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.