சிதம்பரம், செப். 25: சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியம் நான் முனிசிபல் ஊராட்சி சிவசக்தி நகரில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் ரூ.99 லட்சம் மதிப்பில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். சிவசக்தி நகரில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் ரூ.99 லட்சம் மதிப்பில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு குமராட்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா தலைமை தாங்கினார்.

முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்க தலைவர் வழக்கறிஞர் செல்வகணபதி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அம்பிகாபதி, உமாநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சந்தானகிருஷ்ணன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்து பேசினார் மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொறியாளர் அருள்மொழிசெல்வி, நிர்வாகிகள் சர்க்கரை, தமிழ்மாறன், பாலா சிவசக்தி நகர் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.