சென்னை,செப்.25: நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பேனர் வைப்பதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மாவட்ட கலெக்டர்கள் பின்பற்றுவர்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்: தேர்தலுக்காக ஒட்டப்பட்ட 215 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தல் பார்வையாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும், விக்கிரவாண்டி,நாங்குநேரியில் 18 பறக்கும் படைகளும், நிலையான கண்காணிப்புக்குழுக்கள் 18ம், இந்த குழுவுடன் வீடியோ குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.