ஜகார்த்தா, செப்.26: இந்தோனேசியா நாட்டின் செரம் கடல் பகுதியில் புரு மற்றும் மாலுகு தீவுகளுக்கு இடையில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இன்று காலை 5.16 மணியளவில் செரம் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.5 ஆக பதிவாகி உள்ளது.

இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. தூக்கத்தில் இருந்த மக்கள் அலறியபடி தெருக்களுக்கு ஓடி வந்தனர். இதில் கட்டிடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானதாக தெரிகிறது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் உடனடியாக விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.