திருச்சி, செப். 27; திருச்சி ஜமால் முகமது கல்லூரி வணிகவியல் துறை சுயநிதி பிரிவு சார்பில் சார்பில் “டிஜிட்டல் வணிக மேம்பாடு-2019 என்ற தலைப்பிலான ஒருநாள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர். எஸ்.இஸ்மாயில் முகைதீன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பெங்களூர் சி.எம்.ஆர். பல்கலைக்கழக பொருளியல் மற்றும் வணிகவியல் துறையை சார்ந்த முனைவர். இ.ஈஸ்வர ரெட்டி கலந்துகொண்டு தொடக்க உரையாற்றினார்.

மேலும் டிஜிட்டல் இந்திய வணிகத்திலான போட்டிகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் மற்றும் அதற்கான சிறப்பு திறன்களை எவ்வாறு மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தவாறு 176-ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர் டாக்டர். ஏ.கே.காஜா நஜிமுதீன் வெளியிட, முதல் பிரதியை கல்லூரியின் பொருளாளர் ஹாஜி எம்.ஜே.ஜமால் முஹம்மது பெற்றுக் கொண்டார்.