கிள்ளைசின்னவாய்க்காலில் தூர்வாரும் பணி தீவிரம்

தமிழ்நாடு

சிதம்பரம், செப். 27: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கிள்ளை சின்னவாய்க்கால் முகத்துவாரத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளை எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கிள்ளை, சின்னவாய்க்கால், முகத்துவாரம் தூர்ந்து போன காரனத்தினால் உடனடியாக தூர்வாரி முகத்துவாரத்தினை ஆழப்படுத்திட வேண்டும் என்று சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியனிடம் மக்கள் வைத்து கோரிக்கையினை ஏற்று, கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து தூர்வாரும் பணிக நடைபெற்று வருகிறது.

பணியை தொடர்ந்து இன்று கடல் பகுதியில் ஹிட்டாச்சி இயந்திரத்தின் மூலம் தூர்வாரும் பணிகளை படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிள்ளை பகுதி மீனவர்கள் கோரிக்கை யினை உடனடியாக நிறைவேற்றி தந்தார். ஆய்வின் போது பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் அசோகன், சிதம்பரம் முன்னாள் நகர செயலாளர் தோப்பு சுந்தர், கிள்ளை செயலாளர் விஜயன், மாவட்ட க துணை செயலாளர் தேன்மொழி காத்தவராயசாமி, ஒன்றிய அவைத்தலைவர் ராசாங்கம், முன்னாள் ஆவின் தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட இளைஞரணி முருகையன், தன.ஜெயராமன், நிர்வாகிகள் தமிழரசன், தமிழ்மணி, கலையரசன், பொன்னுசாமி, கிள்ளை கவியரசன், வீரதமிழன், கோவிந்தன், மூர்த்தி, சரவணன், கிஷோத், ஜோதிமணி, ஜெயபால், மணிகண்டன் மற்றும் மீனவ கிராம மக்கள் உடன் இருந்தனர்.