சென்னை, செப்.27: விருகம்பாக்கத்தில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருகம்பாக்கம் விநாயகன் தெருவில் வசித்துவந்தவர் விஜயலட்சுமி (வயது 19). இவர், கடந்த 6 மாதங்களாக இங்கு தங்கி, அதே பகுதியில் இயங்கிவரும் சிகிச்சை மையத்தில் நர்ஸாக பணியாற்றிவந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை வெகுநேரம் ஆகியும் விஜயலட்சுமி பணிக்கு வராததால், பணியிடத்தில் உள்ளவர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு வெளிப்புறம் தாழிட்ட நிலையில் இருந்தும், வெகுநேரம் கதவை தட்டியும் திறக்கப்படாமல் இருப்பதால் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.

இதன்பேரில், விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுபார்த்தபோதுதான், விஜயலட்சுமி பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளது தெரியவந்தது. சடலத்தை மீட்ட போலீசார் கே.எம்.சி-க்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். சிதம்பரத்தை சேர்ந்த விஜயலட்சுமி. அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்ததாகவும், தற்போது காதல்தோல்வி ஏற்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.