வாஷிங்டன், செப்.27: சந்திரயான் 2 விண்கலம் மூலம் அனுப்பிய லேண்டர் நிலவில் மென்மையான இடத்தில் இறங்க முயற்சித்துள்ளது. ஆனால், கடினமாக தரையிறங்கியுள்ளது. லேண்டர் விக்ரம் இருக்கும் இடத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை என்று நாசா விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே நிலவின் மேற்பரப்பில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் இன்னும் நிலவைச் சுற்றி வருகிறது. ஆனால் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட லேண்டர் விக்ரம் என்னவானது என்று தெரியாத நிலையில் எல்ஆர்ஓசி கேமராவில் பதிவான புகைப்படங்களை நாசா அனுப்பியுள்ளது.

நிலவில் இருந்து 2.1 கி.மீ தூரம் இருக்கும் போது, லேண்டர் விக்ரம் மென்மையாக இறங்காமல், கடினமாக இறங்கியுள்ளது. அது எங்கு இறங்கியுள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை. எங்களது ஆர்பிட்டரால் அதை படம் பிடிக்கவில்லை’ என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஒரு நிழலில் விக்ரம் லேண்டர் மறைந்து இருக்கலாம் என்றும் அக்டோபர் மாதத்தில் அப்பகுதியில் வெளிச்சம் வரும் போது அதை படம் பிடிக்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசா விண்வெளி மையம் லேண்டர் விக்ரம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.