பயங்கரவாதிகளுக்கு பென்சன் தரும் பாகிஸ்தான்: இந்தியா பதிலடி

TOP-6 உலகம்

நியூயார்க், செப்.28: பயங்கரவாதிகளுக்கு பென்ஷன் அளிக்கும் நாடாக பாகிஸ்தான் இருப்பதாக ஐ.நா.சபையில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

ஐநா பொதுசபை கூட்டத்தில் பாக். பிரதமர் இம்ரான் கான் பேசியதற்கு பதில் உரையாக இந்தியாவின் வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா பேசியதாவது:-

ஐநா சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபருக்கு பென்சன் அளிக்கும் ஒரே நாடு தாங்கள்தான் என்பதை பாகிஸ்தானால் ஒப்புக்கொள்ள முடியுமா? அணு ஆயுத போர் வெடிக்கும் என இம்ரான்கான் மிரட்டுவது சிறந்த நிர்வாகிக்கான தகுதி இல்லை.

தனது வாக்குறுதியை உறுதிபடுத்தும் வகையில், ஐநா பொதுப் பார்வையாளர்களை அழைத்து தனது மண்ணில் பயங்கரவாதிகள் இல்லை என்பதை உறுதிசெய்ய இம்ரான்கான் அழைப்பு விடுக்க வேண்டும்.

ஐநா பட்டியலிட்டுள்ள பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதியுதவி அளித்து வருகிறது. ஐநாவால் அறிவிக்கப்பட்ட 130 பயங்கரவாதி என தங்கள் மண்ணில் இல்லை என்று பாகிஸ்தானால் மறுக்க முடியுமா? பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக உள்ளது’ என்று அவர் பேசினார்..

முன்னதாக, ஐநா பொதுசபை கூட்டத்தில் பேசிய பாக். பிரதமர் இம்ரான்கான், காஷ்மீர் விவகாரத்தால் இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படலாம் என பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.