தி ஃபேமிலி மேன்’ என்ற வெப் சீரிஸ் மூலம் நடிகை பிரியா மணி இணைய தொடரில் அறிமுகமாகிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
ஒரு வலைத்தொடரில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த போது இந்த படத்தின் கதையை இயக்குநர் ராஜ் மற்றும் டி.கே சொன்ன போதே, நான் சுசித்ரா கதாபாத்திரத்தில் இறங்கிவிட்டேன். என்னுடைய கதாபாத்திரம் மட்டும் அல்ல, ‘தி ஃபேமிலி மேன்’ சீரிஸில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இதில் மனோஜ் பாஜ்பயி கதையின் நாயகனான ஸ்ரீகாந்த் திவாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

திரைப்பட படப்பிடிப்புக்கும், வெப் சீரிஸ் படப்பிடிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஒரு நாளில் ஐந்து முதல் ஆறு காட்சிகளை படமாக்கி முடித்துவிடுகிறார்கள். இது ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கிறது. அத்துடன், ’தி ஃபேமிலி மேன் சீசன் 2’ வுக்கான படப்பிடிப்பையும் ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள். அமேசானில் கடந்த 20-ம் தேதி வெளியான இந்த வெப் சீரிஸில் இந்திய திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களான மலையாள நடிகர் நீரஜ் மாதவ், பாலிவுட்டின் சென்சேஷனல் நடிகர் குனால் பகத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.