இன்சியான், செப்.28:  கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய வீரர் காஷ்யப், நம்பர் ஒன் வீரரான ஜப்பானின் கென்டோ மோமோட்டாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்சியானில் பகுதியில் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப், டென்மார்க் வீரர் ஜன் ஜோர்ஜென்செனை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காஷ்யப் 24-22, 21-8 என்ற நேர்செட்டில் ஜோர்ஜென்செனை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் காஷ்யப், 2 முறை உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜப்பானின் கென்டோ மோமோட்டாவை சந்திக்கிறார்.