சென்னை, செப்.30: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்களிடம் நள்ளிரவில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தேறுவதாக அடுக்கடுக்கான புகார்கள் வந்தன. இதன்பேரில், கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபக் குமார் தலைமையில் எஸ்.ஐ.தாமஸ் மற்றும் போலீசார் சிசிடிவி கேமரா பதிவு மற்றும் சம்பவ இடத்தில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு கொள்ளையனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். விழுப்புரத்தை சேர்ந்த சசிகுமார் (வயது 30) என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.