மும்பை, அக்,1: மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 250 புள்ளிகள் உயர்வடைந்து காணப்பட்டது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 250.06 புள்ளிகள் உயர்ந்து 38,917.39 புள்ளிகளாக காணப்பட்டது. இவற்றில் வங்கி பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 69.30 புள்ளிகள் உயர்ந்து 11,543.75 புள்ளிகளாக காணப்பட்டது.இதேவேளையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காலை வர்த்தகம் தொடங்கியபொழுது 10 காசுகள் உயர்ந்து ரூ.70.77 ஆக இருந்தது.