ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார். இந்நிலையில் தற்போது தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில் மனைவி லதாவுடன் போலீஸ் உடையில் கெத்தாக அமர்ந்திருக்கும் ரஜினியின் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தர்பார் படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.