’இந்தியன் 2’ படத்தில் இணையும் பாலிவுட் நடிகர்

சினிமா

ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரி, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல்அகர்வால், ரகுல் பிரீத்திசிங், பிரியா பவானிசங்கர், பாபி சிம்ஹா, விவேக், வித்யூத் ஜம்வால், சமுத்திரகனி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அனில்கபூர் இணைந்துள்ளார். அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விவேக் ஓபராய், அக்ஷய்குமார் உள்பட ஒரு சில பாலிவுட் நடிகர்கள் தமிழ் படங்களில் வில்லனாக நடித்துள்ள நிலையில் அந்தப் பட்டியலில் தற்போது அனில்கபூரும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையில் ரத்னவேலு ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படம் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.