அறப்போர் இயக்கம் மீது போலீசில் புகார்

சென்னை

சென்னை, அக்.1: அறப்போர் இயக்கம் என்ற பெயரில் சில சமூக சக்திகள் இளைஞர்களை மூளை சலவு செய்யும் தவறான செயல்களில் ஈடுபட்டும், நேர்மையான அதிகாரிகளை மிரட்டியும் வருகின்றனர். ஆகவே அறப்போர் இயக்கத்தை தடை செய்ய வேண்டுமென்றும், சம்பந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பிளாக்கேட் அமைப்பின் செயலாளர் கே.ராஜன், பொருளாளர் பழனிவேல், நிர்வாகக்குழு உறுப்பினர் சுவாமிநாதன் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டிருந்தாவது: சென்னையைச் சேர்ந்த அறப்போர் இயக்கம் என்ஜிஓ மற்றும் தகவல் பெறும் சட்டம் என்ற போர்வையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, அரச அதிகாரிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றவர்களின் தவறுகளை சமூகவலைதளங்களில் தட்டிக் கேட்பது போல பொதுமக்களிடம் பாவனை செய்கு கொண்டு மறைமுகமாக மிரட்டி வருவதாக தகவல் வருகிறது.

மேலும் இவர்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்களை கேட்டறிந்து அந்தகவலை திரித்து பத்திரிகைகளில் வெளியிட செய்து, சுயவிளம்பரம் செய்வது, மத்திய,மாநில அரசின் திட்டப்பணிகளை குறித்து அவதூறு பரப்புவது பொதுமக்களை தூண்டிவிட்டு அரசு திட்டப் பணிகளை செய்யாவிடாமல் தடுத்து இடையூறு செய்வது போன்ற அரசுக்கு எதிரான வேலைகளை செய்து ஒரு நக்சல் இயக்கம் போல் அறப்போர் இயக்கம் செயல்பட்டு வருகிறது. பெருநகர மாநாகராட்சிகளில் இவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் முறையான அனுமதி பெறமாலும், சட்டத்தை பின்பற்றாமலும், அரசு நிலங்களை ஆக்கிரமித்து கொண்டும் கட்டடங்களை கட்டியுள்ளனர். இதற்கு உரிய ஆவணங்களை இப்புகார் மனுவுடன் இணைத்துள்ளோம். இப்படி ஆக்கிரமிப்பு மற்றஉம் விதிமீறல் செய்துள்ளவர்களின் வீடுகளுக்கு சீல்வைத்து உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்க உள்ளோம்.

இந்த இயக்கத்தினர் சுமார் 20 முதல் 30 இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர். இதனை ஆணையக் தனிப்படை அமைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு திட்டங்கள் மற்றும் அதிகாரிகளை சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் மிரட்டுவது மற்றும் அரசு திட்டங்களுக்கு இடையூறு செய்வது போன்ற பணிகளை செய்யும் இவர்களின் சமூக விரோத நடவடிக்கைகளை ஆராய்ந்து இந்த அமைப்பின் பதிவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.