சென்னை, அக்.1: பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, ஆவடி அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டையில் ஒரு விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த 17-ம் தேதி முதல் காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர். இதன்பேரில், முத்தா புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 19) என்பவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து, சிறுமியை மீட்டனர்.