சென்னை, அக்.2: திருநெல்வேலியில் நடந்த மாநில அளவிலான ஜூனியர், சூப்பர் சீனியர் பிரிவு ஆண், பெண்களுக்கான சிலம்பாட்ட போட்டியில் திருவள்ளூர் மாவட்ட அணி 79 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டம் வென்றது.  தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் நடந்த இந்த போட்டியில் 79 புள்ளிகள் பெற்ற திருவள்ளூர் முதலிடமும், 45 புள்ளிகள் பெற்ற சென்னை அணி 2-ம் இடமும், 15 புள்ளிகள் பெற்ற திருநெல்வேலி 3-வது இடமும் பெற்றனர். இதனைத் தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மாநில தலைவர் மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். தலைமை தாங்கினார். பொது செயலாளர் கே.ஜி. முரளி கிருஷ்ணன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு சிலம்பாட்ட வீரர்களை பாராட்டினார்.

நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கணேசராஜா, அவைத்தலைவர் சுந்தரலிங்கம், புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பிரபாசுரன், வேலாயுதம், செல்லத்துரை, ஜெசுநாதன் மற்றும் சிலம்பாட்ட கழக மாநில நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், சுப்பையா விக்டர் குழந்தைராஜ், ரத்தின குமார், ஜலேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாட்டை திருநெல்வேலி மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் சிலம்பு ஏ.சுந்தர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். முடிவில் மாநில சிலம்பாட்ட கழக பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி உரையாற்றினார். திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் ஏ.பாஸ்கரன், செயலாளர் முருக கனி, பொருளாளர் எம்.ராஜா ஆகியோரை மாநில தலைவர் ராஜேந்திரன் பாராட்டினார்.