இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

சென்னை

தாம்பரம், அக்.2: தாம்பரத்தில் இயங்கி வரும் ஸ்ரீ சாய் ராம் கல்வி குழும வளாகத்தில் மாணவர்களுக்கு இணைய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தாம்பரத்த்தில் ஸ்ரீ சாய் ராம் கல்வி குழும வளாகத்தில் மிகப்பெரிய இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஸ்ரீ ராம் பிரைம்போர்ட் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து வரவேற்புரையாற்றினார்.

இந்திய ராணுவத்தின் தலைமை கமான்டரும் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் அருண்.கே. ஷாணி தலைமையேற்று சிறப்புரையாற்றினார். இணைய பாதுகாப்பு நிபுணர்கள் ரக்ஷித் டான்டூன், சதீஷ் அஸ்வின், விர்ச்சுஷா நிறுவனத்தின் அருள் செல்வர் தாமஸ், நிறுவனர் மற்றும் இயக்குனர் பிரிஷ்கின்போஷெக், தினேஷ் சரவணன் பாதுகாப்பு ஆய்வாளர்- வெரிவெஷன், வசந்த் டேவிஷ் தலைமை நிர்வாக ஆய்வாளர்- ரோஷெஸ்டன், ஆர். ரவிசங்கர் தலைவர்- கே7 கலைக்குழுமம் பிஹ்லி முரளி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய பயிற்சியாளர் , தென்னிந்தியா, பங்கேற்று கல்லூரி மாணவர்களுக்கு கருத்துரையாற்றினார்கள்.

சாய்ராம் பொறியியல் கல்லூரி மற்றும் சாய்ராம் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர்கள் முனைவர் ஆ.ராஜேந்திர பிரசாத் மற்றும் முனைவர் கா. பழனிகுமார் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த கருத்தரங்க நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ ,மாணவிகள் பங்கேற்றனர்.