புதுடெல்லி, அக்.2: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன் பாட்டை நாடு முழுவதும் தடை செய்வது, திறந்தவெளி கழிப்படமற்ற நாடாக இந்தியா மாறியது உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என தெரிகிறது. தேசத்தந்தை காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி இன்று காலை டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினை விடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அதையடுத்து முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த தினத்தை யொட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள விஜய்காட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதன் பின்னர் மாலையில் அகமதா பாத்தில் சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் காந்தி பிறந்ததின விழாக் களில் பிரதமர் மோடி கலந்துகொள் கிறார். சபர்மதி ஆசிரமத்தில் நடைபெறும் விழாக்களில் நாடு தழுவிய அளவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குக்கு தடை விதித்து 2022-ம் ஆண்டிற் குள் நாடு முழுவதும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நடவடிக்கையை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படு கிறது. சபர்மதி ஆசிரம வளாகத்தில் நடைபெறும் விழாவுக்கு 20 ஆயிரம் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய அமைப்புகளின் நிர்வாகிகள், உயர்நீதி மன்ற நீதிபதிகள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.

அகமதாபாத்தில் பிஜேபி தொண்டர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். பின்னர் நவராத்திரி கொண்டாட்டங்களிலும் பங்கேற்கிறார். இதனிடையே பிஜேபி சார்பில் மகாத்மா காந்தியின் சங்கல்ப யாத்திரை என்ற நாடு தழுவிய அளவில் பாதயாத்திரையை உள்துறை அமைச்சரும், பிஜேபி தலைவருமான அமித்ஷா டெல்லியில் சாலிமார்க் பாக் என்ற இடத்தில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிஜேபி செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் மற்றும் பிஜேபி எம்.பி.க்கள் பங்கேற்கிறார்கள்.