கர்நாடக சிறுவனுக்கு வெள்ளை மாளிகை பாராட்டு

இந்தியா

ஹூஸ்டன் , அக்.2: கர்நாடகத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் துணிச்சலுடன் பிரதமர் மற்றும் உலக தலைவர்களுடன் படம் எடுத்ததை அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை பாராட்டியுள்ளது. அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற மோடி நலமா நிகழ்ச்சியில் கர்நாடகத்தைச் சேர்ந்த சாத்விக் என்ற 13 வயது சிறுவனும் கலந்து கொண்டு அசத்தினான்.

விழா மேடையில் மோடியும், டிரம்பும் ஒன்றாக நடந்து வந்தபோது அவர்களிடம் ‘செல்பி’ ஒன்று எடுக்க வேண்டும் என்று கேட்டான். சிறுவன் சாத்விக்கின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதமர் மோடியும், டிரம்பும் ஒன்றாக சேர்ந்து நின்று அந்த சிறுவனுக்கு போஸ் கொடுத்தனர். இந்த ‘செல்பி’ புகைப்படத்தை அமெரிக்க வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பாராட்டி கவுரவித்துள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.