ஜெய்ப்பூர், அக்,2: ராஜஸ்தானில் பொக்ரான் பாலைவனப் பகுதியில் நேற்று மாலை ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகள் சத்தம் தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்தது. இதனால் வீடுகள்- கட்டிடங்கள் குலுங்கின. வீட்டில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பீதியுடன் வெளியே வந்தனர்.

இந்த வெடிசத்தம் பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்ததாக மக்கள் பீதி அடைந்தனர். மேலும் அணுஆயுத சோதனை நடத்துவதாக வதந்தி பரவத் தொடங்கியது. இது குறித்து ஆயுத பாதுகாப்புப்படைகளின் வட்டாரங்கள் அளித்த விளக்கத்தில், “இது பழைய பீரங்கி குண்டுகளை அழிப்பது மட்டுமே, பீதியடைய ஒன்றுமில்லை” என்று தெளிவுப்படுத்தியது.