திருச்சி, அக்.2: தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி- தஞ்சாவூர் பயணிகள் ரெயில் 4 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது என்று திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவகம் தெரிவித்துள்ளது.  இது குறித்து தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் கூறியதாவது:- தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி- தஞ்சாவூர் பயணிகள் ரெயில் 4 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. திருச்சி- மயிலாடுதுறை பயணிகள் ரெயில் வருகிற 5-ந்தேதி வரை கும்பகோணம்- மயிலாடுதுறை இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 16234 திருச்சி- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் மயிலாடு துறைக்கு வருகிற 31-ந்தேதி வரை (அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள், அக்டோபர் 7 மற்றும் 8-ந் தேதிகள் தவிர) 60 நிமிடம் தாமதமாக சென்றடையும். மயிலாடுதுறை- திருநெல்வேலி ரெயில் 31-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர) திருச்சிக்கு வழக்கமான நேரத்தை விட 45 நிமிடம் தாமதமாக வந்தடையும் என்றார்.