லால்பகதூர் சாஸ்திரிக்கு பிரதமர் மரியாதை

இந்தியா

புதுடெல்லி, அக்.2: மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 115-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 115-வது பிறந்தநாள் நாடு முழுவதும் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் லால் பகதூர் சாஸ்திரியை நினைவுக்கூர்ந்து ட்விட் செய்துள்ளார். லால் பகதூர் சாஸ்திரியின் புகைப்படங்கள் கொண்ட வீடியோ பதிவுடன் அவரின் மன உறுதியையும் கதர் உடை மீதான அவரது பிடிப்பையும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 115-வது பிறந்தநாளையொட்டி டெல்லி விஜய்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். உத்தரபிரதேச மாநிலம் முகல்சராயில் 1904-ம் ஆண்டு பிறந்த லால் பகதூர் சாஸ்திரி, சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் ஆவார். ஜவஹர்லால் நேருவை தொடர்ந்து இந்தியாவின் 2-வது பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பதவி ஏற்றார். அப்போது கட்ச் தீபகற்பத்தின் ஒரு பாதியை உரிமை கோரிய பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே 1965 ஆம் ஆண்டு போர் மூண்டது.