சிதம்பரம் அக்:3: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள இந்த பயிற்சி பட்டறை தொடர்ந்து 10 நாட்களுக்கு நடக்கிறது. இந்த பட்டறையை பாரிஸ் தேசிய அறிவியல் ஆய்வு மையம், தமிழக அரசு தொல்லியல் துறை, அண்ணாமலை பல்கலை கழக மொழியியல் உயராய்வு மையம், திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த பட்டறைபயிற்சி முகாமை நடத்துகிறது. இந்த பட்டறை பயிற்சி விழாவை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் தலைமை தாங்கி பேசினார்.

இவ்விழாவில் பாரிஸ் தேசிய அறிவியல் ஆய்வு மையத்தை சேர்ந்த கல்வெட்டுப் பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளர் அப்பாசாமி முருகையன் பயிலரங்க உரையாற்றினார். தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநரும், கீழடி அகழாய்வு மைய இயக்குநருமான சிவானந்தம், பல்கலைக்கழக மொழியியல் புலதுறை தலைவர் திருவள்ளுவன் உள்பட பலர் கலந்துக் கொண்டு பேசினார்கள். பயிற்சி முகாமில் இந்தியா, கனடா, அமெரிக்கா, பிரான்சு, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.