வார்சா, அக்.4: போலந்து நாட்டில் மகாத்மா காந்தியின் நினைவை போற்றும் வகையில் அந்நாட்டின் தபால் சேவை நிறுவனம் தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து போலந்து நாட்டின் இந்திய தூதரக அலுவலகத்தின் சார்பில் டுவிட்டர் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மகாத்மா காந்தியின் நினைவைப் போற்றும் வகையில் போலந்து நாட்டு தபால் துறை சிறப்பு தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த தபால் தலையை தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய தூதரகம் பதிவிட்டுள்ளது.